உலகம்

நைஜீரியாவில் 5 இந்திய மாலுமிகள் கடத்தல்: உறுதி செய்தார் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

நைஜீரியாவில் 5 இந்திய மாலுமிகள் கடத்தல்: உறுதி செய்தார் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

webteam

நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இதை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளார்.

எம்.டி.அபகஸ் (MT Apecus) என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்த மாதம் கடத்தினர். இதுபற்றி அந்தக் கப்பலில் பணி யாற்றும் மாலுமி சுதீப் குமார் சவுதாரியின் மனைவி பாக்யஸ்ரீ தாஸ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு தனது கணவரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து 5 இந்திய மாலுமிகள் கடத்தப்பட்ட தகவல் பத்திரிகைகளில் வெளியாயின. 

இந்நிலையில் இதை உறுதி செய்துள்ள சுஷ்மா சுவராஜ், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இதுபற்றி அறிக்கைக் கேட்டிருப்பதாகவும் அரசுடன் பேசி கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தியிருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.