புயல் நிவாரண நிதி திரட்ட ஒரே மேடையில், அமெரிக்காவின் 5 முன்னாள் அதிபர்கள் இணைந்து இசை கச்சேரி நடத்தினர்.
அமெரிக்காவை இந்த ஆண்டு அடுத்தடுத்து தாக்கிய ஹார்வீ, இர்மா மற்றும் மரியா புயல்களால் மிகப்பெரிய அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நிதி திரட்டி தருவதற்காக முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்டர், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஒபாமா ஆகியோர் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தினர்.
டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் லேடி காகா, அலபாமா, கட்லின் சகோதரர்கள் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். புயல் நிவாரணத்துக்காக முன்னாள் அதிபர்கள் அமைத்த ஒன் அமெரிக்கா அமைப்பு மூலம் இதுவரை 201 கோடி ரூபாய் நிதி வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது.