உலகம்

சகாராவில் சோகம்: தண்ணீர் தாகத்தால் 44 பேர் பலி!

Rasus

சகாரா பாலைவனத்தில் குடிக்கத் தண்ணீரின்றி 44 பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் இருந்து புலம் பெயர்ந்து 50 பேர் லிபியாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இவர்களில் 17 பெண்கள், இரண்டு சிறுவர்கள், மூன்று குழந்தைகளும் அடங்குவர். சகாரா பாலைவனத்தின் வழியாக வாகனம் ஒன்றில் இவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகனம் உடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பாலைவனத்தில் சிக்கித் தவித்தனர். அவர்கள் கொண்டுச் சென்ற தண்ணீர் காலியானதால் பெரும் தவிப்புக்குள்ளாயினர். பின்னர் தண்ணீரின்றி ஒவ்வொருவராக உயிரிழந்துள்ளனர்.

சிலர் வேகவேகமாக நடந்து தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றை அடைந்தனர். அவர்கள் சொன்னதை அடுத்து செஞ்சிலுவை சங்கத்தினர் அங்கு சென்று உடல்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.