உக்ரைனில் 30-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் கீவ் நகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறார் மருத்துவமனை குடியிருப்புகள், வர்த்தக மையம் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இடிபாடுகளில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சிறார் மருத்துவமனையில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனின் ஆகாய தற்காப்பு ஏவுகணையால் சிறார் மருத்துவமனை தாக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் சம்பவ இடத்தில் ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் சிதறிக் கிடப்பதைக் காட்டும் படங்களை உக்ரைன் வெளியிட்டுள்ளது.