உலகம்

பாகிஸ்தான்: கராச்சியில் ரயில் தடம் புரண்டு 40 பேர் காயம்; ஒருவர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: கராச்சியில் ரயில் தடம் புரண்டு 40 பேர் காயம்; ஒருவர் உயிரிழப்பு

Sinekadhara

தென் பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து லஹோர் நோக்கிச் சென்ற ரயில் தடம்புரண்டதால் 40 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

15-அப் கராச்சி எக்ஸ்பிரஸ் ரோஹ்ரி மற்றும் சங் நிலையங்களுக்கு நடுவே சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 8 பெட்டிகள் தடம்புரண்டதால் அக்கம்பக்கதிலுள்ள மக்கள் உதவியுடன் ரயில்வே துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை படுகாயமடைந்த 40 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டதால் 10 மணி நேரத்திற்குப்பிறகுதான் வழித்தடம் சரிசெய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறந்த பெண்மணியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.