உலகம்

லடாக் மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழப்பு - அமெரிக்க உளவுத்துறை தகவல்

லடாக் மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழப்பு - அமெரிக்க உளவுத்துறை தகவல்

webteam

லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் சீன உயர் அதிகாரியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஸ்ட்ரக்சர், ஆம்புலன்ஸ் மூலம் ஏராளமான வீரர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த, காயமடைந்த சீன வீரர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் தெரியவில்லை. 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் இருக்கலாம் என ஏ.என்.ஐ தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் மோதல் சம்பவம் குறித்து மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைத் தளபதிகள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.