உலகம்

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு - 43 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு - 43 பேர் காயம்

Veeramani

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டு வெடித்ததில் 33 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன் , 43 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறினார். மேலும், “இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் தீய சக்திகள். அவர்களைக் கைது செய்து தண்டிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார். இந்த மசூதி குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.



ஆனால், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு நகரங்களான குண்டூஸ் மற்றும் மசார்-இ-ஷரீப் ஆகிய இடங்களில் வியாழன் அன்று குண்டுவெடிப்புகள் நடந்தன. ஒரு மசூதியிலும், சில நாட்களுக்கு முன்பு மேற்கு காபூலில் உள்ள பள்ளியிலும் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து நாடு பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் சர்வதேச அதிகாரிகளும்,  ஆய்வாளர்களும் நாட்டில் போர்ச்சூழல் மீண்டும் எழும் அபாயம் இருப்பதாகக் கூறுகின்றனர்.