மனதில் மனைவியைச் சுமப்பதால், எடையால் சுமை பெரிதாகத் தெரியவில்லை என போட்டியில் பங்கேற்ற கணவர்கள் தெரிவித்தனர்.
ஹங்கேரியில் மனைவியை சுமந்து செல்லும் போட்டி நடைபெற்றது. மனைவியை தோளில் சுமந்தபடியே கணவன் செல்ல வேண்டும். சகதி நிறைந்த சிறிய குட்டையை கடந்து, கொட்டி வைத்துள்ள வைக்கோல் போரில் நடந்து சென்று, வாகன டயர்களையும் கடந்து இலக்கை அடைய வேண்டும் என்பது பந்தயம்.
சுமார் 260 மீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில், சுமார் 30 தம்பதிகள் பங்கேற்றனர். எந்த தடைகளையும் கணவனும், மனைவியும் இணைந்தே கடந்தால் வாழ்க்கை அழகாகும் என்பதை உணர்த்தும் வகையில் ஹங்கேரியில் தொடர்ந்து 3வது முறையாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
'சுகமான சுமை'யான மனைவிகளை, தோள் மீது தூக்கி ஓடிய கணவர்களை பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மனதில் மனைவியைச் சுமப்பதால், எடையால் சுமை பெரிதாகத் தெரியவில்லை என போட்டியில் பங்கேற்ற கணவர்கள் தெரிவித்தனர்.