உலகம்

உலகின் மகத்தான தொழில் சிந்தனையாளர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

webteam

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் மகத்தான தொழில் சிந்தனையாளர்கள் சிறப்பு பட்டியலில் லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா மற்றும் வினோத் கோஷ்லா ஆகிய 3 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

நூறு‌ தொழிலதிபர்கள் கொண்‌ட இந்த சிறப்புப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இடம் பிடித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாக அமைப்பின் சிறந்த விற்பனையாளர் என‌ அவருக்கு போர்ப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட முக்கியமான தொழிலதிபர்களின் பெயர்களும் அந்த சிறப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.