உலகம்

அமெரிக்க ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் உயிரிழப்பு 

அமெரிக்க ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் உயிரிழப்பு 

webteam

அமெரிக்காவிலுள்ள ஏரியில் மூழ்கி 27 வயது இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்தியாவை சேர்ந்த சுமேத் மன்னார் (27) அமெரிக்காவிலுள்ள ஓரிகன் பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர் அமெரிக்காவின் ஓரிகன் பகுதியிலுள்ள கிரேடர் ஏரிக்கு கடந்த ஞாயிற்றுகிழமை சென்றுள்ளார். இந்த ஏரியின் ‘ஜம்பிங் ராக்’ என்ற இடத்திற்கு அவர் சென்றார். அங்கு இருந்து ஏரியில் அவர் குதித்துள்ளார். 

ஏரியில் குதித்து சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர் வெளியே வராததால் இவரை அதிகாரிகள் தேடி வந்தனர். இவர் இந்த ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பார் என்று அதிகாரிகள் கருதினர். எனினும் அவரது உடலை தேடும் பணியில் தீவிரமாக இருந்தனர். இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவருடைய உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

இந்த மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் அவர் மூழ்கி இறந்தற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.