பிரிட்டன் நாடாளுமன்றத்தேர்தல் முகநூல்
உலகம்

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் | இந்திய வம்சாவளியை சேர்ந்த 26 பேர் வெற்றி!

PT WEB

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் பெண் உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் பற்றி அறிவோம்...

பிரதமராக பதவி விலகும் ரிஷி சுனக், தான் போட்டியிட்ட Richmond and Northallerton தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Suella Braverman மற்றும் ப்ரீத்தி படேல் ஆகியோரும் அவரவர்களின் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ககன் மகிந்திரா, South West Hertfordshire தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஷிவானி ராஜா Leicester East தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் ஷைலேஷ் வரா, அஜ்மீத் ஆகிய கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

(இடமிருந்து வலமாக) Rishi Sunak, Preet Kaur Gill, Priti Patel, Nadia Whittome, Tanmanjeet Singh Dhesi

ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக சீமா மல்ஹோத்ரா, Feltham and Heston தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். Valerie Vaz, Lisa Nandy ஆகியோரும் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ் பேசும் தொழிலாளர் கட்சி வேட்பாளரான உமா குமரன், அபார வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகிறார். பிரிட்டிஷ் சீக்கிய எம்பிக்கள் Preet Kaur Gill, Tanmanjeet Singh Dhesi தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்று பொறுப்பை தக்க வைத்துள்ளனர். Navendu Mishra, Nadia Whittome ஆகிய தொழிலாளர் கட்சி எம். பிக்கள் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்கிறார்கள்.

(இடமிருந்து வலமாக) Suella Braverman, Kanishka Narayan and Shivani Raja.

Jas Athwal, Baggy Shanker. Satvir Kaur, Harpreet Uppal, Warinder Juss, Gurinder Josan, Kanishka Narayan, Sonia, Kumar, Sureena Brackenbridge , Kirith Entwistle , Jeevun Sandher மற்றும் Sojan Joseph ஆகிய தொழிலாளர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியைச் சேர்ந்த Munira Wilson தனது Twickenham தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட Jeremy Corbyn பிரிட்டிஷ் இந்திய தொழிலாளர் கட்சி வேட்பாளரான Praful Nargund -ஐ தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.