உலகம்

தாய்லாந்தை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்.. 22 குழந்தைகள் உட்பட 34 பேர் சுட்டுக்கொலை!

தாய்லாந்தை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்.. 22 குழந்தைகள் உட்பட 34 பேர் சுட்டுக்கொலை!

webteam

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மைத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்து நாட்டில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தி மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இத்துயரச் சம்பவம் நடைபெற்றது. தாக்குதல் நடத்தியவரும் பின்னர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன், சுட்டு கொண்டார். இச்சம்பவத்தில், தனது மனைவி மற்றும் குழந்தையையும் அவர் கொலை செய்துள்ளார்.

பான்யா கம்ராப் என்ற அந்த முன்னாள் காவல் துறை அதிகாரி, போதைப் பொருள் குற்றச்சாட்டு காரணமாக கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் 2 வயதுக் குழந்தையும், 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஆசிரியையும் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா இரங்கல் தெரிவித்துள்ளார்.