உலக மக்கள் அனைவரும் 2020 எப்போது தான் முடியும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். டிசம்பர் 31 அன்று 2020க்கு குட்பை சொல்லிவிட்டு 2021 ஆம் ஆண்டை நல்லபடியாக தொடங்கலாம் என கணக்கு போட்டு வைத்துள்ளனர் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள். உடல், மனம், வளம் என அனைத்து ரீதியிலும் கொரோனா மரண பயத்தை காட்டியது அதற்கு காரணம்.
இந்நிலையில் அமெரிக்காவில் பயங்கரவாதிகள் 9/11 அன்று தாக்குவார்கள் என முன்கூட்டியே கணித்திருந்த பார்வையை முற்றிலுமாக இழந்த பாபா வங்கா பாட்டி 2021 எப்படி இருக்கும் என கணித்துள்ளது இப்போது வைரலாகி உள்ளது.
பல்கெரியாவை சேர்ந்த இவர் 12 வயதில் சூறாவெளியில் சிக்கி கண்பார்வையை இழந்துள்ளார். அதனால் பார்வையை இழந்த அவர் ‘கடவுள் எனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்துள்ளார்’ என அவர் சொல்லி வந்துள்ளார்.
கடந்த 1996 இல் அவருடைய 84 வது வயதில் காலமாகியுள்ளார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என அவர் கணித்து சொல்லியுள்ளார். அவரது கணிப்புகளில் 85 சதவிகிதம் பலித்துள்ளது என்கிறனர் அந்நாட்டு மக்கள்.
2021
“உலகம் ஏராளமான பேரழிவுகளால் பாதிக்கப்படும். மக்களின் உணர்வு மாறும். கடினமான காலங்கள் வரும். மக்கள் பிளவுபடுவார்கள். மனிதகுலத்தின் விதியை மாற்றும் பேரழிவுகரமான நிகழ்வுகளை நான் பார்க்கிறேன். பூமிக்கோளை ஒரு வலுவான டிராகன் மனிதகுலத்தைக் கைப்பற்றும். மூன்று ராட்சதர்களும் ஒன்றுபடுவார்கள். சிலரிடம் சிவப்பு பணம் இருக்கும். நான் 100, 5 மற்றும் பல பூஜ்ஜியங்களைக் காண்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதில் டிராகன் என்பது சீனாவை குறித்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா தான் பாட்டி சொன்ன அந்த மூன்று பேர். சீனாவின் 100 யுவனும், ரஷ்யாவின் 5000 ரூபிளும் தான் சிவப்பு நிறத்தில் இருக்கும் என பலரும் பாட்டியின் கணிப்புக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.