அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 கிலோ மீட்டர் தூரம் கடலில் மிதந்து வந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த மெசேஜை கண்டறிந்த 17 வயது போர்ச்சுகல் சிறுவன் ஒருவன். அந்த சிறுவன் ஆழ்கடலில் மீன் வேட்டை (Spearfishing) ஆடிய போது பிளாஸ்டிக் பாட்டிலை கண்டெடுத்துள்ளான். அந்த சிறுவனின் பெயர் கிறிஸ்டியன் சான்டோஸ் என தெரியவந்துள்ளது.
அந்த பிளாஸ்டிக் பாட்டிலை கடந்த 2018இல் அமெரிக்காவின் ரோட் தீவு பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் கடலில் தூக்கி வீசியுள்ளான். அதில் அவன் ஒரு துண்டுச் சீட்டில் செய்தியையும் எழுதி வைத்துள்ளான். அந்த பாட்டிலைதான் கிறிஸ்டியன் கண்டெடுத்துள்ளேன்.
“இது நன்றியை வெளிப்படுத்தும் நோக்கில் எழுதியது. எனக்கு 13 வயது ஆகிறது. நான் வெர்மோன்ட் பகுதியை சேர்ந்தவன். ரோட் தீவில் உள்ள எனது குடும்பத்தை பார்க்க வந்துள்ளேன்” என சொல்லில் ஒரு மெயில் ஐடியையும் எழுதி உள்ளான். சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கிறிஸ்டியனின் அம்மா மெயில் செய்துள்ளார். இருப்பினும் பதில் ஏதும் வரவில்லையாம். இந்த துண்டு சீட்டு எழுதியவரின் கண்ணில் படும் வரை பகிருமாறு அவர் வேண்டுகோள் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.