நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நைஜர் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டனர். பிணை தொகை வழங்கினால் மாணவர்களை விடுவிப்பதாக பயங்கரவாதிகள் கூறியதையடுத்து, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன் வந்தனர். ஆனால், அந்த தொகை போதுமானதாக இல்லை என பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மிகவும் பலவீனமாக இருந்ததால் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.