உலகம்

16 வயதினிலே 10 கோடி ஃபாலோயர்கள்! டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி

16 வயதினிலே 10 கோடி ஃபாலோயர்கள்! டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி

EllusamyKarthik

அமெரிக்காவை சேர்ந்த 16 வயது சிறுமி டிக் டாக் தளத்தில் வீடியோ கிரியேட் செய்வதை வாடிக்கையாக கொண்டவர் சார்லி D’Amelio. டேன்ஸ் வீடியோக்களை கணிசமாக அப்லோட் செய்வது அவரது வழக்கம். இந்நிலையில் உலகிலேயே 100 மில்லியன் ஃபாலோயர்களை டிக் டாக்கில் கொண்டிருப்பவர் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளார் சார்லி. 

உலகம் முழுவதும் பல பிரபலங்கள் டிக் டாக்கை பயன்படுத்தி வந்தாலும் இதுவரை யாருமே 100 மில்லியன் (10 கோடி)  ஃபாலோயர்கள் பெறாத நிலையில் அவர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி முந்தி உள்ளார் சார்லி.

கடந்த பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் டிக் டாக்கில் வீடியோ போடும் பழக்கத்தை தொடங்கிய சார்லி 100 மில்லியன் ஃபாலோயர்களை எட்டியுள்ளார். வில் ஸ்மித், தி ராக், செலீனா கோமஸ் மாதிரியான பிரபலங்கள் எல்லோரும் சார்லிக்கு பின்னால் தான் உள்ளனர். சார்லியின் குடும்பத்தாரும் பொதுவெளியில் பரவலாக அறியப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.