உலகம்

‘பாம்பு படம்’ பனியனுடன் வந்த சிறுவன் - மாற்றிய பின்னரே அனுமதித்த ஏர்லைன்ஸ்

‘பாம்பு படம்’ பனியனுடன் வந்த சிறுவன் - மாற்றிய பின்னரே அனுமதித்த ஏர்லைன்ஸ்

webteam

பாம்பு படம் பொறித்த பனியனுடன் விமானத்தில் ஏற வந்த சிறுவனை தடுத்தி நிறுத்தி, உடையை மாற்றிய பின்னரே ஏர்லைன்ஸ் அனுமதித்துள்ளது.

ஸ்டீவி லுகாஸ் என்ற 10 வயது சிறுவன் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் நியூஸிலாந்து செல்வதற்காக ஜாஹன்னெஸ்பெர்க் நகரில் உள்ள ஓஆர் தம்போ விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் அணிந்து சென்ற கருப்பு நிற பனியனில் பச்சை நிற பாம்பின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதைக்கண்ட விமான நிலைய அதிகாரிகள், இந்தப் படம் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. தங்கள் விதிமுறைப்படி, பாம்பு பொம்மைகள் மற்றும் படம் பொறித்த துணிகளை அனுமதிக்க முடியாது என சிறுவனை தடுத்தனர்.

இதையடுத்து சிறுவனின் பெற்றொர் விமான நிலைய அதிகாரிகளிடம் பேசினர். அப்போது பனியனை மாற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறுவன் தான் அணிந்திருந்த பனியனை உள்புறமாக மாற்றி அணிந்தார். அதாவது பாம்பு படம் பொறிக்கப்பட்ட வெளிப்புறத்தை உட்புறமாக அணிந்தார். இதைத்தொடர்ந்து அவர் விமானத்தில் அனுமதிக்கப்பட்டார்.