imf, Luxembourg ட்விட்டர்
உலகம்

No அமெரிக்கா, No சீனா! உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? 129 ஆவது இடத்தில் இந்தியா!

சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில் லக்சம்பர்க் நாடு முதலிடத்தில் உள்ளது.

Prakash J

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை நமக்குக் காட்டுவதாகும். அந்தவகையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில், பிப்ரவரி 2024 நிலவரப்படி லுக்சம்பர்க் (Luxembourg) நாடு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அயர்லாந்தும் 3வது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 4வது இடத்தில் நார்வே, 5வது இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன. ஐஸ்லாந்து, கத்தார், அமெரிக்கா, டென்மார்க், Macao SAR உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

International Monetary Fund

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, டிசம்பர் 2023இல், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 நாடுகளில் இந்தியா 129வது இடத்தில் உள்ளது. ஆனால் உலக GDP தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை அடுத்து இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024க்கான உலகளாவிய வளர்ச்சி என்பது 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றே கணித்துள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி விகிதம் 2000 மற்றும் 2019க்கு இடையில் காணப்பட்ட சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 2024 நிலவரப்படி முதல் 10 பணக்கார நாடுகள்

1. லக்சம்பர்க்

2. அயர்லாந்து

3. சுவிட்சர்லாந்து

4. நார்வே

5. சிங்கப்பூர்

6. ஐஸ்லாந்து

7. கத்தார்

8. அமெரிக்கா

9. டென்மார்க்

10. மக்காவோ