அமெரிக்கா முகநூல்
உலகம்

அமெரிக்காவை உலுக்கிய மில்டன் புயல்... புரட்டி போட்ட சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய மில்டன் சூறாவளியால், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

PT WEB

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும், ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினாவின் சில பகுதிகளையும், மில்டன் சூறாவளி தாக்கியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 41 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு பெய்யக்கூடிய மழையின் அளவாக பார்க்கப்படுகிறது.

புளோரிடாவில் 30 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மில்டன் புயல் இந்த நூற்றாண்டியின் கொடிய சூறாவளியாக இருக்கும் என கருதப்பட்டது. இதனையடுத்து, புளோரிடாவை சேர்ந்த 80 ஆயிரம் பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

இருப்பினும், இந்த சூறாவளி எதிர்பார்த்த அளவிற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. காரணம், அண்மையில் அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளியை காட்டிலும், குறைவான பாதிப்பையே மில்டன் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.