உலகம்

சபரிமலையில் 1500 போலீஸார் குவிப்பு !

webteam

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு 1500க்கும் மேற்பட்ட காவலர்கள், கமாண்டோ படை என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து பெண்கல் சிலர் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இதைதொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் சித்திரை ஆட்டுக் திருநாள் பூஜைக்காக நவம்பர் 5 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் நிலக்கல் ஆகிய பகுதிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாளை நடை திறக்கப்பட உள்ள நிலையில் சபரிமலை பகுதியில் 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடை திறப்புக்கு பின்னரே யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பாதுகாப்புக்காக 20 பேர் அடங்கிய கமாண்டோ அணியும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே இரும்பு தடுப்புகளை அமைக்கப்பட்டு கூட்டத்தை சோதனை செய்யவும், போராட்டம் ஏதும் நடத்தப்பட்டால் தடுக்குமளவுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பாஜக நடத்தும் ரத யாத்திரையில் கலந்து கொண்டு கேரளா மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையை கொலை செய்ய போவதாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.