உலகம்

1.2 லட்சம் ஆண்டு பழமையான மனித காலடித் தடங்கள்... சவுதி அரேபியாவில் ஆய்வில் கண்டுபிடிப்பு!

1.2 லட்சம் ஆண்டு பழமையான மனித காலடித் தடங்கள்... சவுதி அரேபியாவில் ஆய்வில் கண்டுபிடிப்பு!

webteam

சவுதி அரேபியாவின் தபுக் பகுதியின் புறநகரில் உள்ள புராதனமான வறண்ட ஏரியில் 1.2 லட்சம் ஆண்டு பழைமையான மனிதர்கள், யானைகளின் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு, அரேபிய தீபகற்பத்தில் பழைமையான வசிப்பிடத்தின் முதல் அறிவியல் சான்றுகள் என சவுதி அரேபியாவின் பாரம்பரிய ஆணையம் தெரிவித்துள்ளது. இங்கு சுமார் 233 யானைகளின் புதைபடிவங்கள் மற்றும் ஓரிக்ஸ் எலும்புகளின் மிச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த புதைபடிவங்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை எனக் கூறப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் பாலூட்டிகளை வேட்டையாடியுள்ளனர். ஆனால் அவர்கள் நீண்டகாலம் தங்கவில்லை. நீண்ட பயணத்திற்கான ஒரு பாதையாக நீர்வழியைப் பயன்படுத்தியுள்ளனர்.

நிபுட் பாலைவனத்தில் கண்டறியப்பட்டுள்ள பழைமையான சான்றுகளின் மூலம் விரிவான வரலாற்றுக் காட்சிகளை புனரமைக்கும் முயற்சியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் பரவிய புராதன மனித சமூகத்தின் பாதையை அடையாளம் காண்பதற்கு, இந்தப் புதைபடிவங்கள் புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளன.