கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்திலும் நாம் மதவாதிகளாக இல்லாமல் மனிதர்களாக இருப்போம் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பல நாடுகளிலும் இயல்பு நிலை முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளும் மக்களை வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தியுள்ளதால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நெருக்கடி நிலை குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அக்தர், ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அனைவரும் மதத்தை விட்டுவிட்டு சிந்திக்க வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் அரசு உத்தரவினை பின்பற்றாமால் இந்துவிட்டால் வைரஸ் பாதிப்பை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சிலர் பொருட்களை பதுக்கி வைத்துவிட்டால், ஏழைகளின் நிலை என்னவாகும் என சிந்திக்க வேண்டும் எனவும், கூலி வேலைக்கு செல்பவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு எப்படி உணவளிப்பார்கள் ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே பொருட்களை பதுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் இந்து மற்றும் முஸ்லீம் என மதத்தினராக இருக்காமல் மனிதர்களா இருப்போம் என்றும், ஒருவருக்கு மற்றொருவர் உதவி செய்துக்கொள்வோம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் சுயநலமாக சிந்தித்து விலங்குகள் போல வாழ்வதை தவிர்த்து, மனிதர்களாக வாழ வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.