உலகம்

“நாம் ஒரு குண்டு வீசினால், இந்தியா 20 குண்டுகள் போட்டுவிடும்” - முஷாரப் பேச்சு

“நாம் ஒரு குண்டு வீசினால், இந்தியா 20 குண்டுகள் போட்டுவிடும்” - முஷாரப் பேச்சு

rajakannan

இந்தியாவிற்கு முன்பு முந்திக் கொண்டு தாக்குதலை முதலில் தொடுக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது இந்த கருத்தினை அவர் தெரிவித்தார். முஷாரப் பேசுகையில், “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமான நிலையை எட்டியுள்ளது. அணு ஆயுத தாக்குதல் இருக்காது. இந்தியா மீது ஒரு அணு குண்டை வீசி தாக்குதல் நடத்தினால், இந்தியா திருப்பி 20 குண்டுகளை வீசி நம்மை அழித்துவிடும்.

அதனால், அதற்கு தீர்வு, நாம் முதலில் தாக்க வேண்டும். அதுவும் 50 குண்டுகளுடன். அப்படி செய்தால், அவர்களால் 20 குண்டுகளை வைத்து நம்மை தாக்க முடியாது. 50 குண்டுகளுடன் முதலில் தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறீர்களா?” என்று கூறியுள்ளார். 

புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், முஷாரப் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ அகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையாக குற்றச்சாட்டினை முன் வைத்து வருகிறது. இருப்பினும், ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுக்க தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.