அமெரிக்காவை மிரட்டும் வகையில் மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது.
ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் அவை மாநாட்டில் பேசிய வடகொரியப் பிரதிநிதி ஹான் சே சோங், அமெரிக்காவுக்கு மேலும் சில பரிசுப் பெட்டகங்கள் காத்திருக்கின்றன எனத் தெரிவித்தார். வடகொரியா நடத்தும் அனைத்துச் சோதனைகளும் தற்காப்புக்கானவையே என்றும் சோங் குறிப்பிட்டார். தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் பொருள்படுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் நடத்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த நாடு நேரடியாக மீண்டும் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.