உலகம்

"நான் பெரிய பொண்ணு என சொல்லிவிட்டார்" -தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மகள் பற்றி பேசிய புதின்

"நான் பெரிய பொண்ணு என சொல்லிவிட்டார்" -தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மகள் பற்றி பேசிய புதின்

webteam

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதை நடைமுறைப்படுத்தப்போவதாகவும் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். மேலும், தடுப்பு மருந்தைப் பெற்ற தன்னார்வலர்களில் தனது மகளும் ஒருவர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மகளின் பெயரை வெளியிடவில்லை.

ரஷ்ய அதிபருக்கு இரு மகள்கள் இருப்பதாகவும் ஒருவர் பெயர் மரியா புடீனா என்றும் உள்ளூர் ஊடகங்களில் வந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. தற்போது தன் மகளைப் பற்றி கருத்துக் கூறியுள்ள புதின், "மக்களுடன் தொடர்பில் உள்ளவராக இருப்பதால், பணிகளை பாதுகாப்பாக தொடர்வதற்கு தடுப்பு மருந்து முக்கியமானது என்று அவர் உணர்கிறார் " எனக் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருத்து எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி ரோசியா 1 டிவியில் செர்ஜி பிரலெவ் என்பவருக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் முதல்கட்ட மற்றும் விலங்குகள் மற்றும் தன்னார்வலர்களுக்கான பலகட்ட சோதனைகளை முடித்துள்ளோம். இந்த தடுப்பூசி ஒரு நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ஆன்டிபாடிகள் உருவாகின்றன. என் மகளின் விஷயத்தில் செய்ததைப் போலவே, அவை பாதிப்பில்லாதவை என்பது எங்கள் நிபுணர்களுக்கு இன்று தெளிவாகத் தெரிகிறது. கடவுளுக்கு நன்றி, என் மகள் நன்றாக இருக்கிறார்" என்று மனந்திறந்து பேசியுள்ளார்.

தடுப்பூசி சோதனையில் தன்னார்வலராக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மகளைப் பற்றிய கூறிய புதின், " அவர் பெரிய பெண். அதனால் அவர் அதுபோன்ற முடிவை எடுத்திருக்கிறார்" என்றும் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.