வீடியோ ஸ்டோரி

“கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டி அடித்தார்கள்”- ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு

“கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டி அடித்தார்கள்”- ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு

kaleelrahman

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். வலைகளை சேதப்படுத்தியதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். எப்பொழுதும் 600 படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் டீசல் விலை உயர்வால் 236 படகுகளில் அனுமதி சீட்டுடன் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 17 கடல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு வலைகளையும் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.

இதனால் ஒவ்வொரு படகுக்கும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது மீனவர்கள் கரைதிரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.