வீடியோ ஸ்டோரி

இந்தியாவில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது?

இந்தியாவில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது?

Veeramani

 நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சோதனையிலேயே உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில் 40 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை.

இந்தியாவில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது?

உலக மக்கள் தொகையில் 27 சதவீத பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் வளர்ந்த நாடுகளே ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சிறார்களுக்கு மாடர்னா, பைசர் போன்ற தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கோவேக்சின், நோவாக்ஸ், சைகோவ்-டி ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டு தற்போது முதல் கட்ட சோதனை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்த மாடர்னா போன்ற தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பேசிய தொற்று நோய் நிபுணர் மருத்துவர் சுரேஷ்குமார், “இந்திய மக்கள் தொகையில் 40 கோடிக்கும் அதிகமான 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் உள்ளனர். எனவே, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துரித்தப்படுத்த வேண்டியது அவசியம். இந்தியாவில் 3ஆவது தடுப்பூசியாக மாடர்னாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது, ஆனால் மாடர்னா ஒரு டோஸ் கூட இந்தியாவுக்கு வரவில்லை" என தெரிவித்தார்.