வீடியோ ஸ்டோரி

“முன்பே அறிவித்திருந்தால் கடனாளி ஆகியிருக்க மாட்டோம்” - விநாயகர் சிலை உற்பத்தியாளர்கள்

Veeramani

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளநிலையில், முன்கூட்டியே அறிவித்திருந்தால், முதலீடு செய்து கடனாளி ஆகியிருக்க மாட்டோம் என்று சிலை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக ஒரு அடியில் இருந்து பத்து பதினைந்து அடி உயரத்திற்கு சிலைகள் செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக பிரம்மாண்ட சிலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

உற்பத்தி செய்த சிலைகளை விற்பனை செய்யவில்லை என்றால் கடனாளியாகிவிடுவோம் என்று வேதனைப்படும் தொழிலாளர்கள், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.