தெற்கு அமெரிக்க நாடான பொலிவியாவில், ஏரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கும், படகுகளை இயக்குபவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பொலிவியாவில் வறட்சி நிலவி வருவதால், விவசாயத்திற்கு நீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருகிறது. மேலும் கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. இந்நிலையில், LA ANGOSTURA பகுதியில் உள்ள ஏரி நீரை பயன்படுத்த அனுமதிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் ஏரியில் இருந்து நீர் எடுத்தால், படகுகளை இயக்க முடியாது எனவும் இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும் எனவும் ஏரியில் படகுகளை இயக்குபவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் தண்ணீருக்காக, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.