ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா மேற்கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது.
அதிகளவில் வெடிபொருட்களை சுமந்து, ஒலியை விட 5 மடங்கு வேகமாக சென்று தாக்கும் திறன் கொண்டவை ஹைபர்சோனிக் ஏவுகணைகள். ஏற்கனவே ரஷ்யா மற்றும் சீனா இவ்வகை ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவும் ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்தது. அலாஸ்காவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை, எதிர்பார்த்த படி செயல்படவில்லை என்றும், ஏவுகணைக்கான பூஸ்டர்கள் இயங்கவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதனை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.