வீடியோ ஸ்டோரி

திருச்சி : தொடர் மழை காரணமாக அகல் விளக்குகள் விற்பனை கடும் பாதிப்பு!

திருச்சி : தொடர் மழை காரணமாக அகல் விளக்குகள் விற்பனை கடும் பாதிப்பு!

EllusamyKarthik

நாளை திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அகல்விளக்குகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மக்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். தீபத்திருநாள் அன்று வீட்டில் விளக்குகள் ஏற்றும் பொழுது இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்பது ஐதீகம். இதற்காக மக்கள் அதிக அளவில் அகல் விளக்குகளை வாங்குவர். ஆனால், இந்த ஆண்டு மழை காரணமாக விற்பனை பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் விடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கார்த்திகை தீபத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வெளியில் வருவதும் குறைந்துள்ளது. இதனால் அகல்விளக்குகளின் விற்பனை மந்தமடைந்துள்ளது.

நான்கு விளக்குகள் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், விற்பனை இல்லாததால் 5 விளக்குகள் பத்து ரூபாய்க்கு விற்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மழை நீடித்தால் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.