வீடியோ ஸ்டோரி

வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று 382-ஆவது பிறந்ததினம்

வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று 382-ஆவது பிறந்ததினம்

Veeramani

சென்னை, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோரின் இரண்டாவது சொந்த ஊரு. இனியவைகளை அள்ளித்தரும் இன்ப ஊரு. பிற மாநிலத்துக்காரங்களையும் வாழவைக்கும் பெரிய மனசுக்கார ஊரு.

சென்னையப் போலவே அதோட சிறப்புகளும் ரொம்ப பெருசு. இங்க FLIGHT மட்டுமில்ல TRAIN-ம் பறக்கும். கடலுக்கும் காதலுக்கும் மெரினா, காய்கறிக்கு கோயம்பேடு, மீனுக்கு காசிமேடு, கிரிக்கெட்டுக்கு சேப்பாக்கம். திரும்புன பக்கமெல்லாம் தியேட்டரு, அன்னாந்து பாக்க எல்.ஐ.சி., ஆச்சர்யமா பாக்க ஏகப்பட்ட கட்டடம்.

ஏறிப்போக BRIDGE, இறங்கிப் போக SUBWAY. கோட்டைக்கு ஜார்ஜ், கோட்டத்துக்கு வள்ளுவரு. நிறைய காசிருந்தா STAR HOTEL, கொஞ்சமா காசிருந்தா கையேந்தி பவன்ல நிலா சோறு. ‘அன்ப அள்ளித்தர்ற ஜனம். அதான நம்ம சென்னையோட குணம்‘.  இது சுனாமில SWIMMING போட்ட ஊரு. வெள்ளத்த விரட்டி அடிச்சுது பாரு.

சென்னை மாறிக்கிட்டே இருக்கும். ஆனா அதோட பெருமை மாறவே மாறாது. சென்னை நம்மள பத்திரமா பாத்துக்குற மாதிரி, நாமளும் அத நல்லபடியா பாத்துக்கணும். இது நம்ம ஊரு மெட்ராஸு, இதுக்கு நாமதான அட்ரஸு.