வீடியோ ஸ்டோரி

திருப்பூர்: மூவரை தாக்கிவிட்டு சோளக்காட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை; பிடிக்கும் பணி தீவிரம்

திருப்பூர்: மூவரை தாக்கிவிட்டு சோளக்காட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை; பிடிக்கும் பணி தீவிரம்

kaleelrahman

திருப்பூர் மாவட்டம் பாபாங்குள்த்தில் மூவரை தாக்கிய விலங்கு சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை (24.01.2022) அவிநாசியை அடுத்த பாபாங்குளம் சோளக்காட்டு பகுதியில் வரதராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை அவரை தாக்கியதோடு மொக்கையன் என்ற மாறனையும் தாக்கிவிட்டு சோளக்காட்டுக்குள் பதுங்கிவிட்டது.

இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாலை 2 மணியளவில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனக்கோட்ட வன அலுவலர் தேஜஸ்வி மற்றும் மாவட்ட வன உதவி அலுவலர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இருபுறமும் கூண்டு வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தற்போது கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட 6 வீரர்கள் முழு பாதுகாப்பு உடையுடன் சோளக்காட்டிற்குள் சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சோளக்காட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை எமணிகண்டன் என்ற வன பாதுகாவலரை தாக்கிவிட்டு மீண்டும் காட்டிற்குள் சென்ற பதுங்கியுள்ளது.

இதனையடுத்து சோளக்காடு முழுவதும் வலைவிரித்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.