வீடியோ ஸ்டோரி

திருவள்ளூர்: அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவால் சர்ச்சை

திருவள்ளூர்: அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவால் சர்ச்சை

kaleelrahman

திருவள்ளூரில் அரசுப் பள்ளி வளாகத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை முன்னிட்டு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த எறையாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டு, மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்துள்ளது.

கொரோனா 3-வது அலை குறித்து சுகாதாரத்துறை எச்சரித்து வரும் வேளையில் எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் அரசுப் பள்ளி வளாகத்தில் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளையும் தூய்மை செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ள நிலையில், இதுபோன்ற தனி நபர் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்தது குறித்து பள்ளி கல்வித்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.