விடாமுயற்சியுடன் போராடினால் தோல்வியே நம்மிடம் தோற்றுப்போகும் என்ற கூற்றுக்கு இணங்க, தனது வலது கையை இழந்த போதிலும் ஒற்றைக் கையில் தினமும் பல கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து, கொரியர் டெலிவரி வேலை செய்து வாழ்வை நகர்த்தி வருகிறார், கோவையை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர்.
நாகரீக வாழ்க்கையில் 50 வயதை கடந்து விட்டாலே, பல சாக்குப் போக்குகளை கூறிக்கொண்டு, வாழ்க்கை ஓட்டத்திற்கு ஓய்வு கொடுக்கவே விரும்புகின்றனர் பலர். ஆனால் 80 வயதைக் கடந்துவிட்ட போதிலும், வாழ்க்கை சக்கரத்தை விடாது சுழற்ற, வாழ்வாதாரத்திற்கு மிக முக்கிய ஆதாரமான வலது கையை இழந்த போதிலும், சைக்கிள் சக்கரங்களை தினமும் பல நூறு கிலோமீட்டர்கள் மிதித்து, வாழ்வை நகர்த்தி வருகிறார், புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமன். வீடியோவில் முழு விவரங்களை காணலாம்.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/saSMEcw7Xco" title="சோர்வாக உணர்கிறீர்களா? இந்த மனிதரைப் பாருங்கள்! #HumanStory #inspiration #PTkovai" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>