வீடியோ ஸ்டோரி

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன - ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன - ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு

Veeramani

தடைசெய்யப்பட்ட அல்கைதா அமைப்புடன் பாகிஸ்தானில் செயபடும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ- முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு மேலும் வலுவடைந்து வருவதாக ஐநாவில் இந்தியா தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, ஐஎஸ் அமைப்பு தனது செயல்பாட்டை மாற்றிக்கொண்டு சிரியா மற்றும் ஈராக்கில் தனது பிடியை வலிமைப்படுத்த முயன்று வருவதாகக் கூறினார்.

அல் கைதா அமைப்பு ஒரு அச்சுறுத்தலாக இருந்துவருவதாக குறிப்பிட்ட அவர், ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் அந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்.