தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி  ட்விட்டர்
வீடியோ ஸ்டோரி

’ஊக்கத்தொகை’ வெறும் அறிவிப்பாகவே இருக்கு; கால்பந்து வீராங்கனைகள் வேதனை.. கைகொடுக்குமா தமிழக அரசு?

2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தற்போதுவரை கிடைக்காத ஊக்கத்தொகை

PT WEB

தேசிய அளவிலான சீனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி வென்ற தகவல் பெரும்பாலானவர்கள் அறிந்ததே. ஆனால் 2018ஆம் ஆண்டு தேசிய அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு, அப்போது அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என்பது தெரியுமா?

தமிழ்நாடு மகளிர் கால்பந்து அமைப்பு உருவாக்கப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே தேசிய அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வென்று வீராங்கனைகள் சாதனை படைத்தனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. அது வழங்கப்படாமல் இருந்த நிலையில், தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.

ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை இந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே உள்ளது. எனினும் இரண்டாவது முறையாக தேசிய அளவிலான சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள் வீராங்கனைகள். அதோடு இந்திய மகளிர் கால்பந்து அணியிலும் தமிழக வீராங்கனைகள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.