வீடியோ ஸ்டோரி

ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுகிறது ’ஒக்கி’ கழுகு - சுப்ரியா சாகு பேட்டி

ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுகிறது ’ஒக்கி’ கழுகு - சுப்ரியா சாகு பேட்டி

webteam

'ஒக்கி' புயலின்போது காயமுற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்து சேர்ந்த சினேரியஸ் வகை கழுகு, தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சைபீரியாவிலிருந்து வரும் கழுகுக்கூட்டத்துடன் சேர்ப்பதற்காகவே, ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக, வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘’சைபீரியாவைச் சேர்ந்த சினேரியஸ் கழுகுகள் வாடிக்கையாக ஜோத்பூர் வரும். தற்போது சினேரியஸ் கழுகுகள் ஜோத்பூர் வரும் காலமாகும். ஒக்கி புயலின்போது தவறுதலாக கன்னியாகுமரி வந்த ஒக்கி கழுகை, சினேரியஸ் கழுகுகள் கூட்டத்துடன் சேர்ப்பதற்காக ஜோத்பூர் கொண்டுசென்றோம். கூட்டத்துடன் சேர்க்கப்பட்டால்தான் 'ஒக்கி' கழுகு அதற்கான வாழ்வியலைப் பழகும்’’ என்றார்.