வீடியோ ஸ்டோரி

நீட் தேர்வில் வெற்றி: போராட்டங்களுக்கு நடுவே மருத்துவம் படிக்கச்செல்லும் பழங்குடியின மாணவி

நீட் தேர்வில் வெற்றி: போராட்டங்களுக்கு நடுவே மருத்துவம் படிக்கச்செல்லும் பழங்குடியின மாணவி

kaleelrahman

பழங்குடியினர் சமுதாயத்தில் பிளஸ் 2 படித்த முதல் மாணவியாகவும், முதல் மருத்துவராகும் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார் கோவையை சேர்ந்த பழங்குடியின கிராம மாணவி. பல தடைகளுக்கு இடையே தடுமாறாமல் தடம் பதித்துள்ள சாதனை மாணவி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

கோவை திருமலையம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் என்ற பழங்குடியினர் கிராமத்தில் முனியப்பன் வசந்தாமணி தம்பதியினரின் மகள் சங்கவி, சாதி சான்றிதழ், மின்சாரம், செல்போன் போன்ற எந்த வசதியும் இன்றி வாழ்ந்த இவர்களின் வாழ்வில் கொரோனா கால நிவாரணம் அளிக்க சென்றவர்களால் அடையாளம் காணப்பட்டது.

அதன் பின்னர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த கிராமத்திற்கு சாலை, மின்சாரம், மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்புக்கு சென்ற சங்கவியை ஊக்குவிக்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறிய வீடும் கட்டித்தரப்பட்டது. ஆனால், இன்னும் அங்கு பிற குடும்பங்கள் குடிசை வீடுளில்தான் வசிக்கின்றனர். முறையான வசதிகளும் இக்கிராமத்திற்கு கிடைக்காமல் இருக்கின்றன.

பின்னர் அதே கனத்த மனதோடு நீட் தேர்வுக்கு படிக்க தொடங்கினார் சங்கவி. மாரடைப்பால் தந்தை மரணம், பார்வை குறைப்பாட்டுடன் இருக்கும் தாயின் பராமரிப்பு என சவால்களும் ,வறுமையும் ,சூழ்ந்திருந்த நிலையில், விடா முயற்சியுடன் படித்து நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண்ணை தாண்டி தேர்ச்சி பெற்றுள்ளார் சங்கவி. இதனால் மலசர் பழங்குடி சமுதாயத்தில் முதல் மருத்தவராக படிக்க உள்ளார் சங்கவி.