வீடியோ ஸ்டோரி

கர்நாடகா: காவி கொடியை இறக்கி தேசியக்கொடியை ஏற்றிய மாணவர்கள்

கர்நாடகா: காவி கொடியை இறக்கி தேசியக்கொடியை ஏற்றிய மாணவர்கள்

Sinekadhara

கர்நாடகா அரசு கல்லூரியில், தேசியக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட காவிக்கொடியை இறக்கி மற்றொரு மாணவர் அமைப்பினர் தேசியக்கொடியை பறக்கவிட்டனர்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்ககூடாது என பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டு அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காததால் சர்ச்சை வெடித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் மற்றொரு தரப்பு மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிபாலில் உள்ள கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவானது. இதற்கிடையே சிமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில் தேசியக்கொடி கம்பத்தில் மாணவர்கள் காவி கொடியை ஏற்றினர். பின்னர் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில், அந்தக் கல்லூரி ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தேசியக்கொடி கம்பத்தில் காவி கொடி ஏற்றியதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தேசிய மாணவர் சங்கத்தினர், தேசியக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட காவிக்கொடியை இறக்கி, மீண்டும் தேசியக்கொடியை ஏற்றினர். அதோடு தேசியக்கொடிக்கு மாணவர் சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்.