சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து 237 வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று 10 மாதங்களே பணியாற்றியுள்ள நிலையில், மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் சஞ்சீப் பானர்ஜி. இதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து 237 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இடமாற்றம் பொதுநலன் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில், சஞ்சீவ் பானர்ஜி விஷயத்தில் அரசியல் கலந்திருப்பதாக வழக்கறிஞர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அவரது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இடமாற்றம் தொடர்பான பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். 75 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்திற்கு தகுதியானவரை நியமித்துவிட்டு, தற்போது 4 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்துக்கு மாற்றுவது முறையற்றது எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.