வீடியோ ஸ்டோரி

“2,600 வீடுகள், 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சேதம்”-கனமழை பாதிப்பால் வாடும் கடலூர் மக்கள்

“2,600 வீடுகள், 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சேதம்”-கனமழை பாதிப்பால் வாடும் கடலூர் மக்கள்

கலிலுல்லா

கடலூரில் வெள்ளம் படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளது. இதன் பருந்துப்பார்வை காட்சிகளை பார்க்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியிருக்கிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக, நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது மழை சற்று குறைந்ததால், வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் வடியத் தொடங்கி உள்ளது. தென்பெண்ணை ஆற்றிலும் நீரின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

சில பகுதிகளில் மட்டும், நீர் இன்னும் வடியாமல் இருப்பதால், அங்கு வசிப்போரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக 2 ஆயிரத்து 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், 700க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.