உத்திரமேரூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஊராட்சி தலைவர் போட்டிக்கு போட்டியிட்டவர் பெயர் வாக்குச்சீட்டில் தவறாக இருந்தத்தால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஒன்றியங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் மிகுந்த ஆர்வமாக வாக்களித்து வந்தனர். அப்படியான நிலையில் காஞ்சிபுரம் வாலஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி என்பவரின் பெயர் தனலட்சுமி என வாக்குச்சீட்டில் பெயர் இருப்பதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ராணிப்பேட்டை: வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே திமுக அதிமுக பிரமுகர்கள் கடும் வாக்குவாதம் (117950
பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதால் தனது வெற்றி பாதிக்கும் என வேட்பாளர் லட்சுமி மற்றும் அவரது முகவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்குச்சீட்டில் அழிக்கும் மை கொண்டு பெயர் திறுத்தல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கும் லட்சுமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நீடிக்கும் குழப்பதால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் அந்த வாக்குசாவடி மையம் பதட்டமான சூழலில் உளளது. வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்க முடியவில்லையே என அதிருப்தியில் வீடு திரும்பினர்.