திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தைக்கு வழக்கமாக 30 முதல் 50 டன் வரை தக்காளி வரத்து இருக்கும் நிலையில், தொடர் மழை காரணமாக 10 முதல் 20 டன் வரையே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
நேற்று மாலை 14 கிலோ எடைகொண்ட ஒரு பெட்டி தக்காளி 700 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தொடர்புடைய செய்தி: விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு