தேனியில் முதல் நாள் தயாரித்த பரோட்டாவை நீரில் நனைத்து வேக வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகே பாக்கிய உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மாலை மற்றும் இரவில் பரோட்டாக்கள் தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். அப்படி தயாரிக்கப்பட்ட பரோட்டாக்கள் விற்பனையாகாத நிலையில், அடுத்த நாள் காலையில் அவற்றை அப்படியே நீரில் நனைத்து வேக வைத்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து, அந்த உணவகத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குற்றச்சாட்டை உறுதி செய்தனர். பின்னர் பாக்கிய உணவக உரிமையாளர் பாக்கியராஜ்க்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.