வீடியோ ஸ்டோரி

நீலகிரி: முதுமலை, தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை

நீலகிரி: முதுமலை, தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை

kaleelrahman

முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு இன்று உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி இன்று வளர்ப்பு யானைகள் தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடைக்கு அழைத்துவரப்பட்டு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காட்டு யானைகளை விரட்ட சென்ற கும்கி யானைகள், குட்டி யானைகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைகளை தவிர்த்த மற்ற யானைகள் அனைத்தும் எடை பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டன. தற்போது முதுமலை பகுதியில் பருவமழை பெய்து பசுமையான சூழல் நிலவுவதால் பெரும்பாலான யானைகள் உடல் எடையை அதிகரித்துக் காணப்படுகிறது. மதம் பிடித்து தற்சமயம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள ஆண் யானைகளின் உடல் எடை குறைந்தும் காணப்படுகிறது.