நாமக்கல் அருகே கோவில் புனரமைப்பு பணியின்போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரியூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாண்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோவில் முன்புறம் பள்ளம் தோண்டியபோது மண்ணில் புதைந்த நிலையில் பழமையான நந்தி சிலை சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நந்தி சிலை எந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை ஆய்வு நடத்த தொல்லியல் துரையினரை வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.