வீடியோ ஸ்டோரி

பல அடுக்கு வடிகட்டும் குழாய்: கொற்கை அகழாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் அரிய பொருட்கள்

பல அடுக்கு வடிகட்டும் குழாய்: கொற்கை அகழாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் அரிய பொருட்கள்

kaleelrahman

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பல அடுக்கு வடிகட்டும் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது தொல்லியல் துறையினரை வியக்கவைத்துள்ளது.

கொற்கையில் 4 இடங்களில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்டவை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது சுடுமண்ணால் ஆன பல அடுக்கு கொண்ட திரவப் பொருட்களை வடிகட்டும் பெரிய குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழாய்கள் ஒவ்வொன்றும் 27 சென்டி மீட்டர் உயரம் கொண்டதாக காணப்படுகிறது.

இந்த குழாயில் திரவப் பொருட்களை வடிகட்டும் வகையில் சிறிய துளைகள் உள்ளன. கொற்கை அகழாய்வுப் பணியில் சங்கு உள்ளிட்ட கடல் சார்ந்த பொருட்களும் கிடைத்து வருகின்றன.