புத்திசாலி என்பவன், சாமர்த்தியசாலிதான் என்றொரு சொலவடை கிராமங்களில் சொல்லப்படுவதுண்டு. இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி, இங்கே உங்களுக்காக!
ஒரு ஊரில் ஒருவர் `தான் உண்டு, தன் பணி உண்டு’ என்றபடி இருக்கிறார். ஆனால் அதற்காகவே அவரை பிழைக்க தெரியாதவர், முட்டாள், சிந்திக்க தெரியாதவர் என்றெல்லாம் சிலர் ஏளனம் செய்கின்றனர். இதையும் கண்டுகொள்ளாமல், அவர் தன் பணிகளை செய்தபடியே இருந்தார். ஒருநாள் எதிர்பாராவிதமாக அவருக்கு உடல்நலம் முடியாமல்போகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்.
திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவர் வீட்டில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. இதை சமாளிக்க, அவருடைய மனைவி தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடிவெடுக்கிறார். இதை மருத்துவமனையிலிருந்த தன் கணவருக்கு தொலைபேசி உரையாடல் மூலம் தகவலும் சொல்கிறார் அவர். அதற்கு அவர், `இப்போதைக்கு நீ அங்கே கை வைக்காதே. அந்தத் தோட்டத்துக்கு அடியே நான் தங்கப்புதையலொன்று வைத்துள்ளேன். அதை யாராவது எடுத்துச்சென்றுவிட நேரிடும், பத்திரமாக பார்த்துக்கொள்’ என்றார். அவரும் சரியென விட்டுவிடுகிறார்.
மறுநாள் காலை. தோட்டம் முழுக்க, விவசாயம் செய்யும் அளவுக்கு உழுதிருந்தது. `அட நாம் செய்யவில்லையே இதை’ என்று எண்ணி, விஷயத்தை கணவரிடத்தில் சொன்னார் மனைவி. தங்கப்புதையல் களவாடப்பட்டதோ என்ற பதட்டத்தில் கணவரிடையே அவர் விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதைக்கேட்ட கணவர், `அட அங்க புதையல் எதுவும் இல்லை... நீ தனியாக விவசாயம் செய்வேன் என்று சொன்னாயே... அதற்கு உதவத்தான் இதை செய்தேன்’ என்றார் சாமர்த்தியமாக!