பிரதமரின் சுற்றுப்பயணத்தை தமிழக மக்கள் வெற்றுப் பயணமாக பார்க்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து இருக்கிறார்.
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, தர்மபுரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின் பேசிய அவர் ”தர்மபுரி என்றாலே என் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்தான். நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது இத்திட்டம், ஆனால் ஆட்சி மாறியதும் கிடப்பில் போடப்பட்டது.” என்றார். மாநிலங்களை மத்திய அரசு சமமாக பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டியதுடன், பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தையும் விமர்சித்தார். சிலிண்டரின் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.